
தமிழகம்
இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?, ‘ஓபிஎஸ் ஐயா வாழ்க’-தொண்டர்கள் முழக்கம்!!
தற்போது அதிமுகவில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக தொண்டர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து அடிதடியில் ஈடுபட்டு வருகின்றன. ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரிமுத்து என்ற அதிமுக நிர்வாகி மீது பன்னீர் செல்வத்தின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் அலுவலகத்தில் காயமடைந்த அதிமுக நிர்வாகி மாரிமுத்து பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று முறையிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பழனிச்சாமி உறுதியளித்தார் என்று அதிமுக நிர்வாகி மாரிமுத்து கூறினார். இதன் மத்தியில் அதிமுக அலுவலகத்தில் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக முழக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். அவர்கள் இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ஓபிஎஸ் ஐயா வாழ்க என்று தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். மக்கள் தலைவர் வாழ்க என பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
