அதிமுக அலுவலகம் சூறை!! சிபிசிஐடி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் ஆஜர்!!

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணைக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆஜரானதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் படி, சி.வி சண்முகம் தரப்பில் என 4 புகார்கள் சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக தலைமை அலுவலகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் அமைச்சர் மகாலிங்கம் இடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இந்த சூழலில் அதிமுக கலவரம் தொடர்பாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக ஆஜராகியுள்ளார். அவரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment