
தமிழகம்
பொதுச் செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும் போட்டியிடலாம்-ஈபிஎஸ் தரப்பு;
தமிழகத்தின் வலிமையான எதிர்க்கட்சியான அதிமுக கட்சியில் தற்போது வரை பொது செயலாளர்கள் என்று யாரும் இல்லை. ஏனென்றால் இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் பொதுச் செயலாளராக செயலாற்றி கொண்டு வந்தார்.
பொதுச் செயலாளருக்கு கட்சியின் அனைத்து விதமான உரிமைகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று செய்தியாளர்கள் மத்தியில் பேட்டி அளித்தனர்.
இந்த கருத்து ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வத்தின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு பொதுச் செயலாளர் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடலாம் என்று கூறியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கலைத்து தற்காலிக பொது செயலாளரை தேர்வு செய்ய திட்டம் உள்ளதாக கூறியுள்ளது.
தற்காலிக பொது செயலாளரை தேர்வு செய்த பின் பொது செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்று இபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
