Connect with us

இன்று முதல் ஓபிஎஸ் ஆட்டம் ஓவர்; இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

தமிழகம்

இன்று முதல் ஓபிஎஸ் ஆட்டம் ஓவர்; இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூம் எடுத்திற்கும் நிலையில் தொண்டர்கள் மத்தியில் பெரும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது

குறிப்பாக கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுவதாக இருந்த 23 தீர்மானங்களுன் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதோடு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலவதி ஆகிவிட்டதாகவும் பொதுக்குழுவில் இபிஎஸ் அவர்கள் அதிமுகவின் பொருளாளராக நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.

இதற்கு ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதன் தீர்ப்பு இன்று வந்தது. இதில் அதிமுக பொதுக்குழு நடத்துவதற்கு தடை இல்லை என நீதிபதிகள் கூறினர்.

இதனால் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top