Connect with us

ஓபிஎஸ் விவகாரம்: எஸ்.பி.வேலுமணி அதிரடி முடிவு!!

velumani

தமிழகம்

ஓபிஎஸ் விவகாரம்: எஸ்.பி.வேலுமணி அதிரடி முடிவு!!

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சநிலையை  தொட்டுள்ள நிலையில் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து இபிஎஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டதும், இபிஎஸ் தரப்பிலிருந்து ஓபிஎஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ், வித்திலிங்கம், மனோஜ் பாண்டியம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது தொடர்பாக அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top