Connect with us

ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன?

modi eps ops

செய்திகள்

ஈபிஎஸ் வரவேற்க, ஓபிஎஸ் வழியனுப்ப, மீண்டும் தர்மயுத்தம்.!! நடந்தது என்ன?

அதிமுகவின் பெரும் தூணாக இருந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சி இரண்டாக பிளந்தது போல் காணப்பட்டது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார்.

அதன் பின்பு பன்னீர்செல்வம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டு சில காலம் நீடித்து வந்தார்.  கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. மேலும் அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிகழ்ந்தது.

இந்த வாதத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆயினும் தர்மமே மீண்டும் வெல்லும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி பேட்டி அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடி வழி அனுப்பி வைத்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை இபிஎஸ் வரவேற்ற நிலையில் ஓபிஎஸ் வழிய அனுப்பி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top