
தமிழகம்
அனல் பறக்கும் போட்டி: ஓபிஎஸ் வீட்டில் பேனர் திடீர் மாற்றம்!
அதிமுகவில் ஒன்றை தலைமை சர்ச்சையானது பூகம்பமாக வெடித்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்பாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலகத்திற்கு ஓபிஎஸ் புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில் ஓபிஎஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருவரின் படமும் இடம்பெற்று இருக்கும் போஸ்டர் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலாக பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இருக்கும் பேனர் வைக்கப்பட்டு இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் வாகனத்தை சுற்றி ஜெயக்குமார் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
