Connect with us

அதிமுக பொதுக்குழு-ஓபிஎஸ் தொடுத்த வழக்கு!! இன்று தீர்ப்பு;

admk meeting

தமிழகம்

அதிமுக பொதுக்குழு-ஓபிஎஸ் தொடுத்த வழக்கு!! இன்று தீர்ப்பு;

ஜூன் மாத இறுதியில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னை வானரகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாதியிலிருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

அதன்பின்பு அடுத்த கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று வழக்கும் தொடுத்திருந்தனர். ஆயினும் கூட ஜூலை பதினொன்றாம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆணை பிறப்பித்தது.

இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வெளியாக உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிமுக பொதுக்குழு வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி அனைத்து தரப்பு வாதமும் முடிந்த பின் தீர்ப்பை குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தது உயர் நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top