Connect with us

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ்..!!

ஓபிஎஸ் ஈபிஎஸ்

தமிழகம்

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ்..!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து உறுப்பினர்கள் திடீரென்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டு கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கலவரம் ஏற்பட்ட ஜூலை 11ஆம் தேதிக்கு பின்பு அதிமுகவில் இரும்பெரும் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாறி மாறி ஆதரவாளர்களை நீக்கம் செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதர ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார். அதன்படி அதிமுகவிலிருந்து தளவாய் சுந்தரம், வேணுகோபால், வைகை செல்வன் உட்பட ஏழு பேர் நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சங்கரதாஸ், விஜயகுமார், என்.ஆர்.சிவபதி, பரமசிவம் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நாளைய தினம் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 29ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நேரம் குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிமுகவில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து கொண்டு வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top