Connect with us

ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்த அழைப்பு: குழப்பத்தில் ஆதரவாளர்கள்!!!

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

தமிழகம்

ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்த அழைப்பு: குழப்பத்தில் ஆதரவாளர்கள்!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சம் தொட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடத்த அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி, இபிஎஸ் தரப்பினருக்கும் மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் கடிதம் கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் பங்கேற்க இருப்பதாகவும், இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழலில் இத்தகைய அறிவிப்பானது அதிமுக வட்டாரங்களில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top