ஓபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்!! – தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் கடிதம்!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொது செயலாளராக இபிஎஸ் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற நிலையில் தற்போது டெல்லியில் இருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சுய விருப்பத்தின் படியும், முழுமனதுடன் தான் இடைக்கால பொது செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.