OPS, EPS செய்த காரியம்: சசிகலா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு !!!
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு வருகின்ற 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016- ஆம் ஆண்டு பிப்ரவரி 29- ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி தினகரனை தேர்ந்து எடுப்பதாக அந்த கட்சி அறிவித்து இருந்தது.
பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017- ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா , தினகரனை பதவியிலிருந்து நீக்கம் செய்தனர்.
பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி அவர்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொது செயலாளர் இல்லாத கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லாது என்றும் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும் சசிகலா, டி.டி.வி .தினகரன் சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நடைபெற்று வந்த நிலையில் டிடிவி தினகரன் அமமுக கட்சி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக டி டி வி தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கோரும் சசிகலா வழக்கு மட்டும் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் நீதிபதி ஸ்ரீதேவி தரப்பில் பட்டியலிடப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் நீதிபதி ஸ்ரீதேவி விடுப்பு எடுக்கப்பட்டார். இதனால் இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகள் வருகின்ற 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
