Tamil Nadu
ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம்: என்ன காரணம்?
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று அவசரமாக டெல்லி பயணம் செல்ல இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை பத்து முப்பது மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லிக்கு சென்றவுடன் அவர் இன்று மாலை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
ஓபிஎஸ் அவர்களின் அவசர டெல்லி பயணம் எதற்காக என்ற கேள்வி அதிமுகவினர் மட்டுமின்றி ஆளும் கட்சியின் தரப்பிலும் எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிப்பார் என்றும் அப்போது டெல்லி பயணத்திற்கான காரணம் குறித்து அவர் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது
சமீபத்தில் தான் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டு டெல்லிக்கு ஓபிஎஸ் சென்று இருக்கலாம் என்று ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
