ஈபிஎஸ் அணியை விட ஒரு நபர் அதிகம்.. ஓபிஎஸ் அணியின் அதிரடி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பணிக்குழுவில் 117 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிச்சாமி அணி அமைத்த நிலையில் அதைவிட ஒரு நபர் அதிகமாக 118 நபர் கொண்ட தேர்தல் குழுவை ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்னும் வேட்பாளர் அறிவிக்காத அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி தேர்தல் பணி குழுவை மட்டும் அமைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில் சற்று முன்னர் ஓ பன்னீர்செல்வம் அணியினர் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளனர்.

இருப்பினும் பாஜகவினார் வேட்பாளரை நிறுத்தாத நிலையில் தான் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவிப்பார் என்றும் அதன் பிறகு தேர்தல் பணி தொடங்கும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவின் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 3 நபர்களை எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தான் வேட்பாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை ஏற்கனவே டிடிவி தினகரன் அறிவித்தள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை சீமான் தனது கட்சியின் வேட்பாளரை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தேமுதிக ஏற்கனவே வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களைகட்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.