ஓபிஎஸ்-துரைமுருகன் மாறி மாறி குற்றசாட்டு! முடிவுக்கு வருமா முல்லைப் பெரியாறு அணை?

நம் தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்-எதிர்க்கட்சித் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இடையே மாறி மாறி வாக்குவாதங்கள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது.

முல்லை பெரியாறு அணை

இவை முல்லை பெரியாறு அணையை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறக்க பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

அக்டோபர் 29ம் தேதி அடிப்படையில் அணையில் 138 அடி நீர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் துரைமுருகன் கூறினார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீர்மட்டம் 138.5 அடியாக இருந்த போதுதான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க பட்டது என்றும் கூறியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை

இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கேள்விகளை கேட்டுள்ளார். அதன்படி அதிமுக ஆட்சியில் மட்டும் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு எப்படி நீர் தேக்க முடிந்தது என்று பன்னீர்செல்வம் கேள்வி கேட்டுள்ளார்.

ஜெயலலிதா பெற்றுத்தந்த தீர்ப்புக்கு இப்போது குந்தகம் செய்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். படிப்படியாக தண்ணீரை குறைப்பதே இரு மாநில அரசுகளின் எண்ணம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வில்லை என்றும் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment