
தமிழகம்
அன்பு அண்ணன் OPS ஒருங்கிணைப்பாளரே இல்லை: EPS அதிரடி கடிதம்!!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அன்புள்ள அண்ணா வணக்கம் என்றும் தாங்கம் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கது அல்ல என கூறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து முடிவெடுத்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தது முறையல்ல என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே ஜுன் 23-ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 65 கழக நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும், 4 பேர் உடல்நிலை சரியில்லாத சூழலில் பொதுக்குழு கூட்டத்தை தவிர்த்ததாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும், தற்போது ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தினால் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
