Connect with us

காலையில் கிழித்தெறியப்பட்ட பேனர்!! மீண்டும் அதே இடத்தில் ஓபிஎஸ் படம்;;

ஓபிஎஸ்- ஈபிஎஸ்

தமிழகம்

காலையில் கிழித்தெறியப்பட்ட பேனர்!! மீண்டும் அதே இடத்தில் ஓபிஎஸ் படம்;;

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் புகைப்படம் இருந்த பேனர் கிழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பேனர் சரி செய்யப்பட்டு ஓபிஎஸ் புகைப்படத்துடன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்பாக இபிஎஸ் தரப்பு தொண்டர்கள் ஓபிஎஸ்-க்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு தொண்டர்கள் இபிஎஸ் எதிராகவும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை அதிமுக தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தரப்பில் 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்கள் எழுதியது மட்டுமில்லாமல் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் புகைப்படத்தை இபிஎஸ் தொண்டர் ஒருவர் கிழித்து எரிந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு இந்த விவகாரம் அதிமுக தலைமை செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதிய பேனர் வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் புகைப்படத்துடன் கூடிய பேனர் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் தொண்டர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top