Connect with us

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!! எப்போது தெரியுமா?

ops eps hc5 1657621628

தமிழகம்

உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!! எப்போது தெரியுமா?

கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல்கள் நிலவி வரும் நிலையில், நேற்றைய தினத்தில் கடந்த மாதம் ஜூலை 11-ம் தேதி நடைப்பெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இத்தகைய தீர்ப்பானது ஓபிஎஸ் தரப்பினரிடம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்கள் சட்டரீதியான போராட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக வருகின்ற திங்கள் கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் இன்றைய தினத்தில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது நிலவி வரும் சூழலில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்வது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top