இபிஎஸ் 117 பேர் என்றால் ஓபிஎஸ் 118 பேர்!! தேர்தல் பணிக்குழு அறிவிப்பு;

தமிழகமெங்கும் பெரும் பரபரப்பு செய்தியாக காணப்படுகிறது ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தான். இதில் திமுக, காங்கிரஸ்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியானது இவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது. ஏனென்றால் இபிஎஸ் சார்பில் ஒரு பிரிவினரும், ஓபிஎஸ் சார்பில் ஒரு பிரிவினரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக 118 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்துள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சார்பில் 117 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 118 பேர் கொண்ட பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக போட்டியிடாவிட்டால் மட்டுமே பன்னீர்செல்வம் அணி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாஜக போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்க தயார் என்று ஓ பன்னீர்செல்வம் அணி மீண்டும் அறிவித்துள்ளது. வைத்தியலிங்கம் தலைமையில் தேர்தல் பணிக்குழுவை அமைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்திடும் அதிகாரம் ஓ.பன்னீர் செல்வத்திடம் மட்டுமே உள்ளது என்றும் தெரிகிறது. இடைத்தேர்தல் நிலைப்பாட்டை பாஜக அறிவிக்காத நிலையில் அக்கட்சி வேட்பாளரை ஆதரிக்க தயார் என்றும் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.