அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நியமித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து இருப்பதாக ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதே போல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 10 பேரை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, சேதுராமன் உள்பட 10 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுகவில் இபிஎஸ் அவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.