News
மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்! மீண்டும் அமளியில் மக்களவை!
2020 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல்,டீசல் விலை படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோலின் விலையானது மிகவும் உயர்ந்து விட்டது. இதனால் பல்வேறு வாகன ஓட்டிகள், பல்வேறு நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்றைய தினம் மக்களவை கூட்டம் நடைபெற்றது. மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை கொரோனா காரணத்தினால்தான் காலை 9 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது . இப்போது பல கட்சிகளின் கருத்தை ஏற்று மக்களவை கூட்டமானது காலை பதினோரு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்ற தகவல் வெளியானது. இதன் அடிப்படையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் மக்களவை கூட்டம் நடைபெற்றது.
ஆனால் மக்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் அனைத்து கோரிக்கைகளையும் ஒதுக்கி வைத்து பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து கலகத்தில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் மக்களவையில் அமளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
