யோகியின் சர்ச்சைக்குரிய பேச்சு; மக்களவையை விட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

இந்தியாவிலேயே சர்ச்சைக்குரிய மாநிலம் என்று கேட்டால் அனைவரும் முதலில் கூறுவது உத்திரப்பிரதேசம் தான். அங்கு அடிக்கடி கலவரங்கள் நிலவும். அதோடு மட்டுமில்லாமல் உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் கருத்தும் சலசலப்பை உண்டாக்கும் வகையில் காணப்படும்.

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு அவர் உத்தரப் பிரதேசத்தை மேற்கு வங்கம், கேரளம் போல மாற்றி விடாதீர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு நேற்றைய தினம் கேரள முதல்வர் பினராய் விஜயன் தக்க பதில் அளித்து இருந்தார்.

அதன்படி உத்தரப்பிரதேசம் கேரளா போல மாறி இருந்தால் அங்கு தரமான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும் என்றும் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் ஜாதிய, மத கொலைகள் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கருத்திற்கு பதில் கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் கூடிய மக்களவையில் இதுபற்றி எதிர்க்கட்சிகள் கருத்து கூறினார். அப்போது மக்களவையை விட்டு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதன்படி யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கேரளம், மேற்கு வங்கம் எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கேரளம், மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று யோகி ஆதித்யநாத் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். யோகியின் கருத்து குறித்து விவாதிக்க மக்களவை எதிர்க்கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment