News
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்; “அதிமுக,பாஜக” தவிர மற்ற கட்சிகள் ஆதரவு!!
தற்போது நம் இந்தியாவில் விவசாயிகள் தொடர்ந்து பல மாதங்களாக போராடிக் கொண்டு வருகின்றனர், குறிப்பாக டெல்லி குஜராத் பஞ்சாப் விவசாயிகள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஏனென்றால் மத்திய அரசு என்றழைக்கப்படுகின்ற ஒன்றிய அரசின் மூலம் மூன்று விதமான வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்கு எதிராக விவசாயிகள் பெரும் கண்டனத்துக்கு மட்டுமின்றி அவர்கள் போராடி வந்தனர். மேலும் அவர்கள் அவ்வப்போது நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராடி வந்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த படி வேளாண் சட்டங்கள் எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
மேலும் இதற்கு அதிமுக பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன மேலும் 3 வேளாண் சட்டங்களும் விவசாயத்தை அளிக்கக்கூடியது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு என்றும் கூறியுள்ளார் குறைந்த பட்ச ஆதார விலை குறித்து மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
