வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! அவையை விட்டு வெளிநடப்பு;

சில தினங்களுக்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவை நாடாளுமன்றத்திலும் எதிர் கட்சி உறுப்பினர்களால் எதிர்ப்புக்குட்பட்டதாகவே காணப்படுகிறது.

lok sabha

இந்த நிலையில் தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேறியது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளன. இரண்டு அவைகளிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

ஆயினும் தேர்தல் சீர்திருத்த மசோதா எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.கடந்த சில நாட்களாகவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்வது நடந்து கொண்டே வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment