லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை! மக்களவையில் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ்;

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகளின் மீது வரிசையாக கார் ஏற்றி விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வு குழு, இது திட்டமிடப்பட்ட செயல் என்றும் தவறுதலாக ஏற்பட்ட விபத்து இல்லை என்றும் கூறியிருந்தது.

ராகுல் காந்தி

இதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ் கொடுத்தார்.

மக்களவையில் ராகுல்காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். விவசாயிகள் கொலை திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு குழு நேற்று கூறியுள்ளது. விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஒன்று அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் அஜய் மிஸ்ராவை ஒன்றிய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார். கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

லக்கிம்பூர்  விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ராகுல், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 4 பேர் நோட்டீஸ் வழங்கினர்.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விவாதிக்க மக்களவையில் டி ஆர் பாலு நோட்டீஸ் வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment