Connect with us

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுவிட்டு சேலம் பயணித்த எதிர்க்கட்சித் தலைவர்! தனித்து விடப்படுமா பாஜக?

bjp admk 1

தமிழகம்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுவிட்டு சேலம் பயணித்த எதிர்க்கட்சித் தலைவர்! தனித்து விடப்படுமா பாஜக?

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுவிட்டு சேலம் பயணித்த எதிர்க்கட்சித் தலைவர்! தனித்து விடப்படுமா பாஜக?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுகவும்-பாஜகவும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

admk flag

இருப்பினும் இரு கட்சிகளுக்கு இடையே பல சுற்றுக்களாக இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இடப் பங்கீடு பேச்சுவார்த்தை முடியாத நிலையில் அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்ததால் இரு கட்சிகள் உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு கட்சிகள் இடையே மனஸ்தாபம் இருந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடங்கியது.

நாகேந்திரன் விமர்சனத்தை சமாளிக்கும் வகையில் அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவதாக அண்ணாமலை கூறியிருந்தார். இருப்பினும் நாயினார் நாகேந்திரன் விமர்சனம் தொடர்பாக இன்னும் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் மதவாத அரசியலை முன்னெடுப்பதாக எந்த விமர்சனமும் அதிமுகவை பெரிதாக யோசிக்க வைத்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் வலியுறுத்துவதன் காரணமாகவே சொற்ப இடங்களை மட்டும் அதிமுக முடிவெடுத்துள்ளது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக இடையே கூட்டணி உடைகிறது போல காணப்படுகிறது. இடப் பங்கீடு குறித்து இரு கட்சி நிர்வாகிகள் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் உறவில் விரிசல் நிகழ்ந்துள்ளது.

இன்று அதிமுக பாஜக இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் பயணம் செய்துள்ளார். அதிக நெருக்கடி கொடுத்தால் அக்கட்சியை கழற்றி விட அதிமுக திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மட்டும் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவில் கடும் எதிர்ப்பு நிலவுவதாக தகவல் கிடைத்துள்ளது. பெயருக்கு சொற்ப இடங்களை மட்டும் கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும் பாஜக அதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top