Connect with us

பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எதிர்கட்சி தலைவர் பேச்சு!: உதயநிதி

உதயநிதி

தமிழகம்

பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எதிர்கட்சி தலைவர் பேச்சு!: உதயநிதி

பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எதிர்கட்சி தலைவர் பேச்சு!: உதயநிதி

வருகின்ற சனிக்கிழமை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்காக வேட்பாளர்கள் பலரும் வித்தியாச வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கட்சி சார்பில் களம் இறங்கும் வேட்பாளர்களுக்கு கட்சியின் சில முக்கிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வாக்கு சேகரிப்பில் அவர்களுக்கு உதவுகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ உதயநிதி மாவட்ட வாரியாக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதன்படி பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நெல்லையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும்போது இதற்கு விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய அவர் சட்டமன்றத்தை முடக்கி மீண்டும் தேர்தல் வைத்தால் அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று நடிகரும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top