உங்க ஆட்சி போல இல்ல! நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு தக்க பதிலடி!!

நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பல்வேறு விதமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக அதிக அளவு நெல் கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க பல்வேறு விதமான நகைகள் எடுக்கப்படுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக நெல் மூட்டைகளை பாதுகாக்க வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அதற்கு அமைச்சர் சங்கராபரணி பதிலளித்தார். அதன்படி நெல் மூட்டைகளை பாதுகாக்க கொள்முதல் நிலையங்களுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சங்கராபரணி கூறினார்.

நெல்கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சங்கராபரணி அறிவித்தார். கொள்முதல் செய்யப்பட்ட நெல் திறந்த வெளியில் எங்கும் சேமிக்கப்படமல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியை போல இல்லாமல் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய விதிகள் பின்பற்றப் படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார். புதிய நேரடி கொள்முதல் நிலையங்களை உருவாக்கி அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment