செய்திகள்
நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!!
அப்போது படிக்கின்ற இளைஞர்கள் மத்தியில் மிகவும் கவலையை உருவாக்கியது எதுவென்றால் நுழைவுத்தேர்வு என்றழைக்கப்படுகின்ற என்றன்ஸ் எக்ஸம் தான். அதிலும் குறிப்பாக மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கிக்கொண்டே உள்ளது. ஏனென்றால் இந்த நீட் தேர்வு வருஷாவருஷம் மாணவ மாணவிகள் தற்கொலை செய்வது கொள்வதும் தெரிகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் நம் தமிழகத்தில் சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள எடப்பாடிபழனிசாமி நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதன்படி நீட்தேர்வு அச்சத்தால் காட்பாடி அருகே சவுந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று அறிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது பெற்றோராக எனது வருத்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார். மேலும் மாணவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் உடனே வழங்குங்கள் என அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் தொடர்ச்சியாக நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்முன்னே தெரிகிறது.
