Connect with us

“45 நாட்களுக்கு முன்பு கடல் கொந்தளிப்பு” எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

News

“45 நாட்களுக்கு முன்பு கடல் கொந்தளிப்பு” எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

85a3c837e5250d0f6cbe4b8f8c95e929

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது எதிர்க் கட்சியாக மாறியுள்ளது அதிமுக. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சிக்கு அவ்வப்போது சிலவற்றை வலியுறுத்தி வருவார். மேலும் இவர் தற்போது மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசுக்கு வலியுறுத்த உள்ளதாக காணப்படுகிறது.50311124462350e30576103afb5894c1

அதன் தொடர்ச்சியாக தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாகையில் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பினை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் 40 நாட்களுக்கு முன்பு நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் 100 மீட்டர் அளவிற்கு ஊருக்கு வந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் 100 மீட்டர் நிலப் பகுதியில் உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.மேலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிககரிக்க  கூடும் என அங்குள்ள மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top