ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே லஞ்ச ஒழிப்பு துறையினர், வருமான வரித்துறையினரின் சோதனை அடுத்தடுத்து நிகழ்கின்றன. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் அலுவலகங்களில் தொடர் சோதனைகள் நடைபெற்றன. அதில் ஏராளமான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதனால் ராஜேந்திர பாலாஜி உறவினரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதற்கு தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய துடிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற காரணத்துக்காக சட்டத்திற்குப் புறம்பாக துன்புறுத்தல் நடைபெறுவதாகவும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களைத் தொந்தரவு செய்வது முறையல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment