அந்த வார்த்தைக்கு முன்பு… பேரவையில் திமுகவினரை காக்க வைத்த எடப்பாடி!
மேகதாது அணை தொடர்பான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி நதிநீர் விவகாரத்தில் கடந்த அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் நதியின் குறுக்கே எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாலும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவித்தார்.
மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் உரிமையை ஏன் நிலை நாட்டவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக ஒருமனதாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.
