Tamil Nadu
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!
முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி சற்றுமுன் காலமானார்
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்கள் காலமானதை அடுத்து அதிமுக பிரமுகர்கள் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
