திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் இன்று இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியினை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதை கொண்டாடும் வகையில் கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் கட்சியின் அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் அடங்கிய பேனர் பாலபிஷேகம் செய்தும் தங்கள் மகிழ்ச்சியான வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “திமுக கட்சி வீட்டுக்கு அனுப்புவது எங்களது லட்சியம் எங்களது நோக்கமாக இருக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு செய்து காலம் காலமாக இருக்கும் மரபு எனவும் அதனை சபாநாயகர் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மீண்டும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாக கூறினார்.

கர்நாடகா தேர்தலில் ஒரு தொகுதியில் வேட்பாளர் நிறுத்துவதால் கூட்டணிக்குள் எந்த பிளவும் ஏற்படாது எனவும் கர்நாடக மாநில அதிமுக பிரதிநிதிகள் எங்களை வலியுறுத்தியதாலே வேட்பாளர் நிறுத்தினோம் . வேட்பாளர் நிறுத்துவது அதிமுகவின் அடையாளம் காட்டுவதற்கு தான் எனத் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.