
Entertainment
அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தீயசக்திகள்: இயக்குநர் பேரரசு காரசார பேச்சு!!
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வன்முறையாக வெடித்தது. இதனால் பீகார், மகாராஷ்டிரா, உ.பி மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருக்கும் இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்தும், கடைகளை அடித்து நொறுக்கியும் தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு தமிழக முதல்வரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என அண்மையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் இளைஞர்கள் ரயிலை கொளுத்தும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது என திரைப்பட இயக்குனர் பேரரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனிடையே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்த எப்படி நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் என்னைப் பொறுத்தவரையில் பொது சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என கூறியுள்ளார்.
மேலும், அக்னி பாத் திட்டம் இது போன்ற அடையாளங்களை காட்டு விட்டதாகவும், எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்கும் தீயசக்தி கும்பலை மோடி களையெடுக்க வேண்டுமென திரைப்பட இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
