Connect with us

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: 31 நாட்களில் சுமார் 2423 கஞ்சா வியாபாரிகள் கைது!

operation cannabis

தமிழகம்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0: 31 நாட்களில் சுமார் 2423 கஞ்சா வியாபாரிகள் கைது!

கடந்த மாதம் நம் தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 தொடங்கியது. இது தமிழகமெங்கும் திருட்டுத்தனமாக நடைபெறும் கஞ்சா விற்பனை தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே கஞ்சா உபயோகம் அதிகமாக உள்ளதால் இதனை தடுத்து நிறுத்தும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் ஒரு கட்டமாக தற்போது வரை சுமார்  2423 பேர் கைதாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0  கீழ் கடந்த 31 நாட்களில் சுமார் 2423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

6 ஆயிரத்து 319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 449 டன் குட்கா,  சுமார் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. திண்டுக்கல், மதுரை, தேனியில் கைதான வியாபாரிகளின் வங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்குகள் சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top