Connect with us

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை

Tamil Nadu

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை

b658acb920140bb5a741ed8c33f5081b

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இன்று சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனையில் பள்ளிக் கல்வித் துறை இயக்கக அதிகாரிகள், மாவட்ட முதன்மை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெறும் ஆலோசனையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவு அடைந்ததை அடுத்து செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கலாம் என்றும் முதல் கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற ஆகஸ்ட் மாத தேர்வு மதிப்பெண் மதிப்பீடு குறித்த ஆலோசனையும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்த ஆலோசனை இன்று நடைபெறுவதால் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top