Connect with us

புதுக்கோட்டை மக்களுக்கு அமைச்சர் சொன்ன இனிப்பான தகவல்; முதற்கட்டமாக 69 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

paddy procurement centers

செய்திகள்

புதுக்கோட்டை மக்களுக்கு அமைச்சர் சொன்ன இனிப்பான தகவல்; முதற்கட்டமாக 69 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

புதுக்கோட்டை மக்களுக்கு அமைச்சர் சொன்ன இனிப்பான தகவல்; முதற்கட்டமாக 69 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு!

இந்தியாவில் அதிக அளவு பயிர் சாகுபடி செய்யும் மாநிலங்களில் முதலிடத்தில் நம் தமிழ்நாடு தான் உள்ளது. இதற்கு உறுதுணையாக அமைவது டெல்டா மாவட்ட விவசாயிகள் தான். இந்த நிலையில் பல இடங்களில் புதிது புதிதாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக  100க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் 169 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார்.

கலிங்கப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடி விவசாயிகளுக்காக தற்போது 69 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார். நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top