ரஷ்யா மீது பொருளாதார தடை! உக்ரைனுக்கு ஆதரவு மட்டும் தான்; படைகளை அனுப்ப மாட்டோம்!

நேற்று நடந்த ரஷ்யா உக்ரைன் போருக்கு முன்னதாகவே பல மாதங்களாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து கொண்டு வருகிறது. குறிப்பாக முக்கிய நிலைகளில் ரஷ்யப் படைகளை குவித்த போதே ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் போர் புரியலாம் என்று அமெரிக்கா அடுத்தடுத்து எச்சரிக்கையை விடுத்து கொண்டு வந்தது.

அதன் விளைவாக நேற்றைய தினம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் புரிய தொடங்கியது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

அதன்படி உக்ரேனில் நுழைந்து தாக்குதல் நடத்தி கொண்டு வரும் ரஷ்யா மீது தற்போது பொருளாதார தடையை விதித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்றும் அமெரிக்கா அதிபர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு தனது ஆதரவை தெரிவித்து கொண்டுவந்தாலும் ரஷ்யாவை எதிர்க்க படைகளை அனுப்பவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதன்படி தாக்குதல் நடத்திய ரஷ்யா மீது எதிர்த்து போரிட படைகளை அனுப்ப மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment