தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

நம் தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைவோர மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் தொடர் கனமலையின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாட்களாக இன்றைய தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவினை மீறி ஏதேனும் பள்ளிகள், கல்லூரிகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தார் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன். இதனால் தேனி மாவட்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment