ஜெயலலிதாவை இப்படி மட்டுமே பார்த்தேன்: இளவரசி பரபரப்பு தகவல் !!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை தொடங்கி  இருப்பதால்  காலை 10 மணிக்கு சசிகலா அண்ணன் மனைவி இளவரசி  ஆஜரானார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தியதால் சசிகலா அண்ணன் மனைவி இளவரசிக்கு சம்மன் அனுப்பட்டது. இன்று இளவரசியுடம் சேர்ந்து அவரது மகன் அவரது மகன் விவேக்கும் வருகை தந்தார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு எதன் அடிப்படையில் மர்மம் இருக்கிறது என்றும் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்தாரா என்று கேள்விகள் எழுப்ப திட்டமிடப்பட்டிருந்தன.

அந்த வகையில் தற்போது அவர் கண்ணாடி வழியாக மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார்.

நான் 75 நாட்கள் மருத்துவ மனையில் சிகிச்சையின் போது ஒரு சில முறை மட்டும் கண்ணாடி வழியாக பார்த்ததாகவும் மருத்துவ மனையில் இருந்த போது சசிகலா மட்டுமே ஜெயலலிதா உடன் இருந்து பார்த்ததாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment