ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் அல்டிமேட்டில் வீட்டில் மாஸ்காட்டி வந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதால் அடுத்த சீசனில் கலந்து கொள்கிறேன் என கூறி விடைப்பெற்றார்.
இதனிடையே இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் வீட்டில் இந்த வாரம் நிறைய சண்டைகள் நடந்து வந்தநிலையில் திடீரென mental health அதிகமாக பாதிக்கிறது என கூறி வனிதா வெளியே வந்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அனிதா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
இதில் “என்னை திமிர்பிடித்த, அகங்காரமான நபர் எனநினைப்பவர்களும். ஆம் நான் அப்படித்தான். அதற்கு நான் தகுதியானவள் தான். அதை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது உங்கள் பிரச்சனை, அது என் பிரச்சனை இல்லை. எனக்கு நான் தான் முக்கியம்” என தெரிவித்து உள்ளார்.