ஒரே நாளில் மட்டும் சென்னையில் 758 வழக்குகள் பதிவு! விதிகளை மீறி பட்டாசு வெடிப்பு!

பட்டாசு

தமிழகத்தில் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டன. இருப்பினும் ஒரு சில இடங்களில் தடைவிதிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தீபாவளி

சென்னையில் தடை, விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தவர்களின் குறித்து 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் விற்பனை செய்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது .

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் உச்சநீதிமன்ற இடித்த நேர விதியை மீறிபல மாவட்டங்களில் பட்டாசுகள் வெடிக்க படுகின்றன.மற்ற மாவட்டங்களிலும் விதிகளை மீறி பட்டாசு வெடித்தல், விதிமீறி பட்டாசு விற்பனை செய்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print