நம் தமிழகத்தில் தற்போது ஏராளமான திட்டங்கள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவை மக்களிடையே வரவேற்பு பெற்று இருந்தாலும் நீதிபதிகளிடையே அதிருப்தியான கருத்தினை உருவாக்கியுள்ளதாக காணப்படுகிறது.
ஏனென்றால் தமிழகத்தில் அறிவிக்கப்படுகின்ற சில திட்டங்கள் குறிப்பிட்ட நேரங்களில் முடிக்கப்படுவதில்லை என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். அதன்படி மக்களுக்கான திட்டங்களை வகுக்கும் அரசு அதை குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தி முடிப்பதில்லை என்று நீதிபதிகள் அதிருப்திணை தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொருத்தவரை இனி யாருக்கும் தயவு காட்ட மாட்டோம் என ஹை கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக விட்டால் பிடிவாரன் பிறப்பிக்கப்படும் என்றும் ஹை கோர்ட் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தாதது குறித்து அய்யம்பெருமாள் என்பவர் அவமதிப்பு வழக்கினை தொடுத்திருந்தார். 2020 டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019 ஜூலையில் பிறப்பித்த உத்தரவை இன்றுவரையும் அமல்படுத்தவில்லை என்று அவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.