இனி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி! கலப்பின மாடுகளுக்கு அனுமதி கிடையாது!!-அமைச்சர் மூர்த்தி;

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நம் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும். அதோடு வீர விளையாட்டுகளும் நடைபெறும். குறிப்பாக மதுரை, தேனி, சிவகங்கை போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.

இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி செல்வர். அவர்கள் மட்டுமின்றி போட்டியில் கலந்து எந்த வீரருக்கும் அடங்காத மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

இந்த நிலையில் நடக்க இருக்கின்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இனி நாட்டு மாடுகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை முகாமை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி இத்தகைய தகவலை கூறினார். கலப்பின மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என்றும் அமைச்சர் மூர்த்தி கூறினார்.நாட்டு மாடுகளை அபிவிருத்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment