தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும் : ஜேபி நட்டா

தமிழகத்தில் 10 புதிய பாஜக அலுவலகங்களை பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா திறந்து வைத்துள்ளார். மேலும் பேசிய அவர் நாட்டில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளும் நெருக்கமான நட்பு கொண்டுள்ளதாகவும் இந்த நடைமுறைக்காக பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் போராடி வருவதாகவும் கூறினார்.

காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது.தமிழக அரசியலும் அதே அடிப்படையில்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சுட்டிக்காட்டி நட்டா கூறியது: மு.க.ஸ்டாலின் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை.தமிழக மக்களை பற்றி திமுகவுக்கு கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட்நியூஸ்!

தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே நல்லாட்சியை கொடுக்க முடியும் என்றும் தமிழகத்தில் பாஜக மலரும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.