
தமிழகம்
ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்!! மீறினால் கடை உரிமம் ரத்து;
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்த உடன் பலவிதமான துறைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவற்றுள் ஒன்றுதான் பால்வளத்துறை. அதிலும் ஆவின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இனி ஆவின் கடைகளில் ஆவின் பொருளை மட்டும் தான் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆவின் கடைகளிலும் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல இடங்களில் ஆவின் கடைகளில் மற்ற நிறுவனத்தின் பொருட்கள் விற்பனை செய்து வருவதை அறிந்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
