காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அடுத்தடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட 7 பள்ளிகள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகள் விடுமுறை

இந்த  7 பள்ளிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் ஆகும். ஏனென்றால் இந்த அரசு பள்ளிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள ஏழு அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர்  அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம் தொடக்கப்பள்ளி , அவளூர் தொடக்கப்பள்ளி, தம்மனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய ஏழு அரசு பள்ளிகளில் மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment