மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி; நின்று செல்ல தடை!: டெல்லி அரசு

இந்தியாவில் கொரோனா பாதிப்பே ஏற்று இறக்கமாக காணப்படுகிறது. இந்த சமயத்தில் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் பரவுகிறது. இதனால் நாள்தோறும் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

ஒமைக்கிரான்

ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த  ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் ஒமைக்ரான் பரவல் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன் முதற்படியாக டெல்லியில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்று செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. டெல்லியில் கூட்டத்தை தடுக்க பேருந்துகளும் 50% பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் ஒமைக்ரான் பாதிப்பு டெல்லியிலும் அதிகமாக காணப்படுவதால் இத்தகைய கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment