கடந்த 2011 முதல் 2019 வரை அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அப்போதைய துறையின் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்திருப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளில் 1 லட்சத்து 55 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில் வெறும் 26,000 வீடுகள் மட்டும் கட்டி விட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அளித்திருப்பதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
இதனிடையே அதிமுக ஆட்சியில் 26,000 வீடுகள் கட்டப்பட்டு அதில் மக்களின் பயன்பாட்டிற்கு 2,000 வீடுகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிலர் லாபத்திற்காக நகர்புறங்களை விட்டு எங்கேயோ வீடு கட்டியதால் மக்கள் அதில் குடிபுகாமல் இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டில் நில உரிமை உள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளிகளுக்கு தாமாகவே வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் தனிவீடுகள் கட்டப்படும் என அமைச்சர் கூரினார்.